தண்ணீர் செல்வம் பெருஞ்செல்வம் ;
உயிர் காக்கும் அருஞ்செல்வம் .
மரம் காத்து மழை பெருக்க ,
உரம் கொள்வோம் நெஞ்சினிலே !
தூய்மை காத்து நதிகள் இணைத்து ,
சேய்கள் வாழ வழி வகுப்போம் .
வறட்சி யில்லா உலகு அமைக்க ,
திறட்சியுடன் நல்விதி சமைப்போம் .
சொட்டு நீரும் தங்கமன்றோ ?
தட்டு இன்றி சேமித்து தாய் –
நிலத்தடி நீர்மட்டம் உயரச் செய்து ,
நலமுடன் வாழ முயன்றிடுவோம் .
தண்ணீர் தேவை இன்று நமக்கு
கண்ணீர் தான் வருகுது அதனால்
பூசல் ஒன்றும் ஏற்படாமல் காடுகள்
நேசமுடன் வாழ வந்தனை செய்வோம்.
– திரு.ரா.முருகேசன்