இலைகளின் மீது தீடிரென ஓர் ஈர்ப்பு இம்மாலையில் துளிர்த்தது.
இயற்கையின் கொட்டிக் கிடக்கும் ஆச்சரியங்களில் இலைகளும் அடங்கும் என்பதை சிறு மழலை கூட அறியும்.
சிற்றுண்டிக்கு ஏதுவாக ஒரு இலை,
விருந்துண்ண ஒரு இலை,
தோரணம் நூற்க ஓர் இலை,
புகைக்க ஒரு இலை,
புகைபோட ஒரு இலை,
இருமல் தீர ஒரு இலை,
இளைப்பு போக ஒரு இலை,
வெண்முடி போக்க ஒரு இலை
தலைக்குளிர்ச்சி காக்க ஒரு இலை,
புண்ணுக்கு மருந்தாய் ஒரு இலை.
வலிகளுக்கு வேதாய் ஒரு இலை.
உற்சாகம் ஊற்றெடுக்க ஒரு இலை,
உணர்வு மிகுதியாக ஒரு இலை, படுக்கும் பாயாக ஒரு இலை,
வசிக்கும் வீடாக ஒருஇலை,இப்படி இழைகிறது நம் வாழ்வில் இலை.
இவை மட்டும் இல்லையெனில் இயற்கை என்ற ஒன்றை எப்படி நாம் உறுதியாய் நம்ப முடியும்?
– திரு.ராஜராம்