விளைந்து வீடு வந்த காய்கறிகளின் தோலில் வழியே
வேதிக்கலவை வாசம் விலக மறுக்கிறது.
சுவைக்கக் கடித்த பழங்களின் சதைத்துண்டங்களின் ஊடே
கந்தக மணம் பரவிக் கரைகிறது.
கொதித்துப் பொங்கும் சோற்றின் ஆவியின் உள்ளீடாய்
யூரிக் அமில குமிழ்கள் வெடித்துப் பரவி வழிகிறது.
கட்டி முடித்த ஜாதிமல்லி பூக்களின் இதழ் விரியும் நொடியில்
பாஸ்பரஸ் அமில நெடியும் சேர்ந்து வருடுகிறது.
காய்ச்சும் எண்ணையின் கமறும் மணத்தில்
பெட்ரோலிய மெழுகின் சாயலும் சற்று ஓங்கி மணக்கிறது.
இயற்கை சார்ந்து வாழவேண்டும் என்ற
என் எண்ணம் மடடும் இயல்பாய் மணக்கிறது.
– திரு.ராஜாராம்