எதற்காக இந்த மழை?

கடலிடம் வாங்கிய கடனை வட்டியோடு அதன் வாரிசுகளான ஆறுகளுக்கு திருப்பிச் செலுத்துகிறதோ வானம்?

மண் காதலிக்கு கம்பிகளால் ஆன தந்திகளால் தூது விடுகிறதோ மேகம்?

புவியில் பயிர்கள் முளை விடுவதற்கும்,மரங்கள் கிளை விடுவதற்கும், வேறு தேசத்தில் வேலை செய்து மழைப்பணமாய் அனுப்புகிறதா ஆகாயம்?

தன் சகோதரிகளான குளங்கள் வறண்டு வாடுவதைக் கண்டு பொறுக்காது கண்ணீர் உகுக்கிறதா அதன் தமையனான மேகம்?

மண்ணுலகில் வாழும் மனிதர்களிடம் ஈரம் குறைந்து விட்டது என்று தன் பங்கு ஈரத்தை மழையாய் வழங்குகிறதோ விண்ணுலகம்?

இதில் எதற்காக இந்த மழை?

திரு.ராஜாராம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Message Us on WhatsApp