காற்று அசைக்காத மரக்கிளைகளின்
நகரத்து இரவுகள்.
அருகாமை வீட்டின் வாசனை தெரியாத அடுக்ககங்கள.
அவசர ஊர்திகள் சிவப்பு பொட்டோடு கடக்கும் தூரச் சாலைகள்.
நிற்க நேரமற்று விரையும் வாகனங்கள்.
இயந்திர வணக்கம் பரிமாறி கடக்கும் பக்கத்து மனிதர்கள்.
சமையலறை புகை போக்கியை தவிர சாத்தப்பட்ட சன்னல்கள் மற்றும் கதவுகள்.
அலறி அறையும் தொலைக்காட்சி விவாதங்கள்;கீச்ச பயந்து முடங்கிக் கிடக்கும் பறவைகள்.
எரியாத தெருவிளக்கின் கீழே உணவின்றி அலையும் தெரு நாய்கள்
தாடையில் அணிந்த கவசத்துடன் நடை பயிற்சி செய்யும் உயர் பொருளாதார வகுப்பினர்.
இவை எல்லாவற்றையும் கடந்து பெருங்குரலில் அழும் மழலையின் ஒலி என்னை மகிழ்த்துகிறது உறங்க ஏதுவாக
– திரு.ராஜாராம்