இயற்கையின் வண்ணக்கலவைகளை தன் இறகில் ஏந்திய படபடக்கும் உயிர்க்காகிதம்.
இறைவன் தன் எண்ணச்சிதறல்களை அடிக்கடி வண்ணங்களில் வரையும் ஓவியம்.
புழுவாய் உருவாகி, பின் பூச்சியாய் பெரிதாகி சிறகடிக்கும் சின்னக் காவியம்.
முயற்சிக்கு உலகம் முன்வைப்பது வண்ணத்துப் பூச்சியின் வாழ்க்கைச் சுழற்சி.
மகிழ்ச்சி என்ற சொல்லை என்றும் நினைவூட்டுவது அதன் கவர்ச்சி.
பரபரக்கும் இந்த வாழ்க்கைச் சூழலை அமைதிப்படுத்தி பறந்து கடக்கிறது என்னை…
மகரந்தச் சேர்க்கைக்கு தன் பங்கைத் தந்து பாதுகாக்கிறது நம் மண்ணை…
– திரு.ராஜாராம்