வேனிற்காலம்

தகிக்கும் தார்ச்சாலை ஓரம் அடர்ந்து பரவியிருக்கும் புளிய மரத்தின் நிழலின் கீழே குவிந்துகிடக்கும் இளநீர் குவியல்…

அகலப்பாதைக்காக கொட்டப்பட்ட மண்குவியலின் ஓரம் பதநீர் நெகிழிக் குவளைகளோடு சீவப்பட காத்திருக்கும் திரண்ட பனங்காய்கள்…

நான்கு முனைச் சாலை சந்திப்பின் ஓரம் இயந்திர பற்சக்கரங்களால் பிழியப்பட வேண்டி தவமிருக்கும் செதுக்கிய கரும்புகள்.

நெடுஞ்சாலை மருத்துவமனை வாசலில்,இயந்திர அரைப்பானில் சர்க்கரைப் பொடியோடு‌ சேர்ந்து சாறாய் கரையக் காத்துக்கிடக்கும் மலர்ந்த மஞ்சள் நிற சாத்துக்குடி பழங்கள்.

வணிகவளாகங்களின் அருகில் பேராவூரணி குளிர்பதன‌ பெட்டிகளில் ஊற்றி வைக்கப்பட்டிருக்கும் பல்வேறு வண்ண குடிக்கும் திரவங்கள்.

மறந்து விட்ட வேனிற்காலத்தை மீண்டும் நினைவு படுத்துகின்றன…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Message Us on WhatsApp