எது மரணம் என்பதில் குழப்பம் ஏதுமில்லை எனக்கு…
பசித்தவன் இருக்கையில் பங்கிடாது நான் உண்ணும் போது என் ஆன்மா மரணிக்கிறது.
அழுகையில் இருப்பவனை ஆறுதல் படுத்தாது நான் அமைகையில் என் மனம் மரணிக்கிறது.
வாழப் பொருள் வேண்டி சிலர் என்னை நாடும்போது அதை மதியாது நான் நகர்கையில் என் மகிழ்ச்சி மரணிக்கிறது.
நோயால் உடல்குன்றி மீளாத் துயரில் தவிப்போரை நான் உணராது உழலும்போது என் நலம் மரணிக்கிறது.
என் அனுபவம் அனைத்தையும் அடுத்தவருக்கு அளிக்காது நான் வாழ்கையில் என் குணம் மரணிக்கிறது.
உலகோரை என் உடன் பிறவாதார் என எண்ண நினைக்கையில் என் சித்தம் மரணிக்கிறது.
இத்தனை மரணித்து பின் வாழ்ந்து உயிர் உடல்விட்டு பிரிவதுதான் மரணம் என்ற உலகோர் கூற்றில் உடன்பாடு இல்லை எனக்கு….