வெற்றி என்ற வார்த்தை துளிர்விட தோல்வி என்ற வார்த்தை உரமாய் உறைகிறது.
முடியும் என்ற வார்த்தை முளைவிட முடியாது என்ற வார்த்தை முனைப்போடு முயல்கிறது
மாற்றம் என்ற வார்த்தை உயிர்பெற மனநிலை என்ற வார்த்தை உளியாய் உதவுகிறது
பக்குவம் என்ற வார்த்தை பரிமளித்திட பிரச்சினை என்ற வார்த்தை துளைக்கிறது.
பொதுநலம் என்ற வார்த்தை ஒளிர்ந்திட சுயநலம் என்ற வார்த்தை தணலாய் சுடுகிறது.
ஞானம் என்ற வார்த்தை பிறந்திட தேடல் என்ற வார்த்தை கருவாய் அமைகிறது.
நாம் என்ற வார்த்தை வாழ்ந்திட நான் என்ற வார்த்தை திரிகிறது.
வார்த்தைகளின் வெளிப்பாடே வாழ்க்கை என்ற வாக்கியம் மட்டும் நிலைக்கிறது.